சென்னை: மீனம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சகுந்தலா, (பெ/வ.57) என்பவர் வசித்து வரும் வீட்டின் பின்புறம், உதயசந்திரன், (வ/32) மற்றும் இவரது மனைவி, ராஜேஸ்வரி, பெ/வ.30 என்பவர்கள் வசித்து வருகின்றனர். இரு வீட்டிற்கும் இடையே உள்ள பொது வழி தொடர்பாக கடந்த 17.6.2021 அன்று மதியம் சகுந்தலாவுக்கும், உதயசந்திரனுக்கும் வாய் தகராறு ஏற்பட்டு, உதயசந்திரனும், ராஜேஸ்வரியும் கல் மற்றும் கட்டையால் சகுந்தலாவை தாக்கி இரத்தக் காயம் ஏற்படுத்தினர்.
சகுந்தலா, மேற்படி சம்பவம் குறித்து S3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
S3 மீனம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை மேற்கொண்டு, இருவரும் சேர்ந்து சகுந்தலாவை தாக்கியது உண்மையென தெரியவந்ததின்பேரில், எதிரிகள், 1) உதயசந்திரன், (வ/32) மீனம்பாக்கம் மற்றும் இவரது மனைவி 2) ராஜேஸ்வரி, (வ/30) ஆகியோரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், உதயசந்திரனின் தம்பி கலைசெல்வன் என்பவர் 18.6.2021 அன்று இரவு சகுந்தலா வீட்டிற்கு சென்று தகராறு செய்து, கடப்பாறையால் குத்திவிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக சகுந்தலா S3 மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில், வழக்குப் பதிவு செய்து, ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, தகராறு செய்து மிரட்டிய கலைச்செல்வன், (வ/27) மீனம்பாக்கம் என்பவரை கைது செய்தனர். மேற்படி குற்ற எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
















