சேலம்: சேலம் மாவட்டம் மல்லூர், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பேருந்து மற்றும் கோயிலுக்கு வரும் வயதான பெண்களை குறி வைத்து அவர்கள் கழுத்தில் அணிந்திருக்கும் நகை பறிப்பு மற்றும் பையில் வைத்திருக்கும் பணத்தை நூதனமாக திருடும் கும்பலை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எம்.ஸ்ரீ.அபிநவ் இ.கா.ப அவர்களின் உத்தரவின் படி ஊரக உட்கோட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.தையல்நாயகி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடித்தனர். மேலும் குற்றவாளியிடம் இருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.