தஞ்சை : தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் கடந்த சில மாதங்களாக நடந்து செல்லும் வயதானவர்களை குறிவைத்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து அவர்களை தனது வண்டியில் ஏற்றிச் சென்று அவருக்கு மது வாங்கி கொடுத்து அவர் மிகுந்த போதை நிலை அடைந்தவுடன் அவர்களிடம் உள்ள நகைகளை பறிப்பதை வாடிக்கையாக வைத்துக் கொண்டு இருந்த நூதன வழிப்பறி திருடனை பற்றி அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி .ரவளிப்பிரியா IPS அவர்களின் உத்தரவுப்படி தஞ்சை மாவட்ட SP.தனிப்படை போலீஸ் உதவி ஆய்வாளர் திரு ராஜேஷ்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர் திரு .மோகன், தலைமை காவலர் திரு. உமாசங்கர், மற்றும் காவலர்கள் அருண்மொழி, அழகு சுந்தரம், நவீன்,சுஜித் ஆகியோர்கள் அடங்கிய தனிப்படை போலீசார் அப்பகுதி சிசிடிவி பதிவுகளை வைத்து பல்வேறு கோணங்களில் விசாரனை மேற்கொண்டு வந்த நிலையில் குற்றவாளி தஞ்சாவூர் சீனுவாசபுரத்தில் வசித்து வரும் மேலட்டூர் கலியமூர்த்தி மகன் சந்திரசேகர் (50/21) என்பது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் அவனை அதிரடியாக கைது செய்தார்கள். அப்போது அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் இரண்டு மோதிரங்களை கைப்பற்றி அவனை அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து மேலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்