திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் செல்வம் என்பவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்து அவரை கிராம மக்கள் சிறைப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் அப்பகுதியில் விளையாட வந்த சிறுமியை செல்வம் (62). என்பவர் ஆசை வார்த்தை கூறி தொடர்ந்து வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
















