விழுப்புரம் : விழுப்புரம் பிரம்மதேசம், தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதத்தில் நீா் வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. தற்போது நிலவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டிவனம் வனத்துறை சார்பில் மரக்காணம் அடுத்த குரும்பரம், அகரம், குமளம்பட்டு, கீழ்புத்துப்பட்டு வனப்பகுதி மற்றும் கிடங்கல் ஏரி உள்ளிட்ட 5 இடங்களில் ஒருங்கிணைந்த நிலவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணி திண்டிவனம் வனச்சரக அலுவலர் அஸ்வினி தலைமையில் நடந்தது. இதில் வனசரக பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர்.