தர்மபுரி : மொரப்பூர் வனச்சரகத்திற்குட்பட்ட அய்யம்பட்டி, காவேரிபுரம், சோலைக்கொட்டாய், எட்டிப்பட்டி உள்ளிட்ட வனப்பகுதிகளில் வனச்சரக அலுவலர் ஆனந்தகுமார், வனவர் செந்தில்குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள் கடந்த 2 மாதங்களாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் வன விலங்குகளை வேட்டையாடுவதும், உரிய அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கிகளை வைத்திருப்பதும் குற்றம் என்று கூறி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்தநிலையில் வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 9 நாட்டுத்துப்பாக்கிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவை நேற்று தர்மபுரி மாவட்ட வன அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.