திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் குடும்பபிரச்சனை காரணமாக ஒட ஓட விரட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் குடும்பபிரச்சனை காரணமாக மலையப்பன்படடியை சேர்ந்தவர் கருப்பையா மகன் சாமித்துரை. இவருக்கும் இதே ஊரை சோ்ந்த மருது என்பவருக்கும் குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.
இந்நிலையில் சாமித்துரை வத்தலக்குண்டு உசிலம்பட்டி ரோட்டில் உள்ள பேக்கரியில் டீ சாப்பிட வந்துளார். அப்போது மருது மற்றும் ஒருவருடன் அரிவாள் கத்தியுடன் வந்து சாமித்துரையை ஓட ஓட விரட்டி பேக்கரி முன்பாக அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றனர்.
பேக்கரி பணியாளருக்கு வெட்டியவர் யார் என்ற அடையாளம் தெரிந்தது. அவரின் தகவலின் பேரில் வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிரேத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.