இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில், இராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம், இராணிப்பேட்டை காவல்துறை மற்றும் நிப்பான் பெயிண்ட் நிறுவனம் இணைந்து 10/06/2022 நடத்திய, இராணிப்பேட்டை வாலாஜா சந்திப்பு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வண்ண ஓவியமிட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் வேலூர் சரக காவல் துணை தலைவர் முனைவர். ஆனி விஜயா இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டார்கள். அவருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்தியன் இ.கா.ப அவர்கள், காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், மேலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்