வேலூர் : வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுவது போன்ற போலியாக பரப்பப்பட்டு வரும் videos-கள் மற்றும் வதந்திகளை பற்றிய விழிப்புணர்வு வடமாநிலத்தவர்களுக்கு ஏற்படுத்த மாவட்டம் முழுவதும் உள்ள காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள வடமாநிலத்தவர்களை சந்தித்து போலியாக பரப்பப்படும் videos-கள் மற்றும் வதந்திகளை நம்பி யாரும் அச்சமடைய வேண்டாம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்