கோவை: கோவை பக்கமுள்ள சோமனூர் – ராசிபாளையம் இடையே ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ரெயில் வந்தபோது திடீரென்று அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர். பின்னர் அவர்கள் ரெயிலில் இருந்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இதை அறிந்த ராசி பாளையம் பொதுமக்கள் திரண்டு வந்து அந்த வடமாநில வாலிபர்கள் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அவர்கள் அனைவரும் பீகார் மாநிலத்தில் இருந்து கோவைக்கு வேலை செய்வதற்காக வந்ததும் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ததால் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக ரெயிலைபாதி வழியில் நிறுத்தி இறங்கியது தெரியவந்தது.
மேலும் அவர்கள் அனைவரும் ஏற்கனவே கோவை மாவட்டத்தில் பல இடங்களில் வேலை செய்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.