ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மங்கம்மாபேட்டை ரயில்வே மேம்பாலம் அருகில் காஞ்சிபுரம் பகுதியில் இருந்து 144 தடை உத்தரவை மீறி வடமாநில தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி அரக்கோணம் நகர காவல்துறை ஆய்வாளர் திரு.முத்துராமலிங்கம் அவர்கள் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது காவல்துறையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட வடமாநிலத்தை சேர்ந்த கூலித் தொழிலாளிகள் இருப்பதாகவும், இவர்களை காஞ்சிபுரத்தில் இருந்து அவர்கள் சொந்த மாநிலத்திற்கு லாரியின் மூலம் அட்டைப் பெட்டிகளை வைத்து மறைத்து கொண்டு ராஜஸ்தான் செல்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்
நன்றி :
திரு. வீரா ஜனா