திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சாலையில் உள்ள SSM நூற்பாலையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் அவர்கள் சந்தித்து அவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கினார்கள். மேலும் வடமாநில தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்தார். அவர்களை சமூக இடைவெளியுடன் நிற்கவைத்து சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதன் அவசியம் குறித்தும் கூறினார்கள். தேவையற்றது வெளியில் செல்ல வேண்டாம் என்றும், வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணியும் படியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அழகுராஜா