இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வாலாஜா (AAA College) – ல் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டிருந்தனர். இம்மையத்தினை வடக்கு மண்டல காவல் துறை தலைவர் திரு.சந்தோஷ்குமார், இ. கா. ப., அவர்கள் பாதுகாப்பு பணிக்கான ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். திருமதி.ஆனி விஜயா, இ.கா.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. திருமதி.தீபா சத்யன், இ.கா.ப., அவர்கள் இருந்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்