வேலூர் : ஜோலார்பேட்டை தனியார் மண்டபத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் முனைவர். M.S.முத்துசாமி.,IPS, அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் முன்னிலையில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.N கண்ணன்.,IPS, அவர்கள் மாவட்ட ஆயுதப்படை தலைமையகத்தில் இயங்கி வரும் பல்பொருள் அங்காடி மற்றும் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிகள் மற்றும் பதிவேடுகளையும் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.K.S.பாலகிருஷ்ணன்.,BVSc, அவர்களின் பரிந்துரையின்படி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர்.N.கண்ணன்.,IPS, அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிடித்த காவலர்களையும், திருப்பத்தூர் காவல்துறை பல்பொருள் அங்காடியில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி ஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களும், காவல் ஆய்வாளர்களும், உதவி ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்