திருவாரூர்: தற்போது துவங்கியுள்ள வடகிழக்கு பருவமழை தொடர்ந்து
பெய்து வருவதால் திருவாரூர் மாவட்டத்தில் புயல்,வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாத வகையில் உடன் மீட்புபணிகளை திருவாரூர்மேற்கொள்ளும் வகையில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் 5-காவல் மீட்புக்குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழு ஒன்றிற்கு ஒரு உதவி-ஆய்வாளர் தலைமையில் 10 காவலர்கள், ஒரு Eicher வாகனம் என மொத்தம் 5 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 50 காவலர்கள் தனித்தனி வாகனங்கள் மற்றும் மீட்புபணி உபகரணங்களுடன் திருவாரூர்,நன்னிலம்,
மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,முத்துப்பேட்டை ஆகிய உட்கோட்ட தலைமையிடங்களில் தயார்நிலையில் உள்ளனர்.
இக்குழுவில் உள்ள காவல் அலுவலர்கள் அனைவரும் SDRF-பயிற்சி (பேரிடர் மேலாண்மை மீட்பு பயிற்சி) முடித்தவர்கள் ஆவர். இந்நிலையில்திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று
(09.11.21) திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்து 5- காவல் மீட்பு குழுவினரையும்
மாவட்ட ஆயுதப்படையில் வளாகத்தில் ஒன்றுதிரட்டி மீட்புபணி உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்து.
மீட்புபணி காவல் அலுவலர்களுக்கு கனமழை மற்றும் இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வது குறித்தும்,மீட்பு பணிகளை விரைந்து மேற்கொள்வது குறித்தும் அறிவுரை வழங்கினார்கள்.
மேற்படி காவல் 5 காவல் மீட்புக்குழுக்களும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி பார்வையில் இயங்கி வருகிறது.
திருவாரூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அந்தோணி ராஜா