விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன் IPS., அவர்களின் தலைமையில் மாவட்டத்தில் உள்ள வங்கி மேலாளர்களை நேரில் அழைத்து வங்கி பண பரிவர்த்தனை மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்புதல் போன்ற வழிமுறைகளின் பாதுகாப்புகள் குறித்து முக்கிய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. வங்கியின் வெளி மற்றும் உட்புறத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் ஏடிஎம் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது மற்றும் ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும்போது அதற்கான பாதுகாப்பு பணியில் பாதுகாவலர்களை அமர்த்தி இதன் மூலம் பணத்தை நிரப்புதல் வங்கியில் இருந்து பணத்தை வண்டியில் லோட் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கையுடனும், பாதுகாப்புகளும் செயல்பட வேண்டும் எனவும், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரில் ஏடிஎம் பணம் நிரப்ப எடுத்துச் செல்லும் போது வாகனத்தை நிறுத்தி ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என கூறி ஏடிஎம்மில் நிரப்ப சென்ற பணத்தை கொள்ளையடித்த சம்பவத்தை மேற்கோள் காட்டி ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் வங்கி ஊழியர்கள் அனைவரும் அடையாள அட்டைகள் அணிந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும், சில மர்ம நபர்கள் வங்கிக்குள் நுழைந்து போலியான அடையாள அட்டைகள் வைத்து மோசடியில் ஈடுபட கூடும் எனவும், வங்கி வேலை நேரத்தில் சந்தேகத்தில் இடமான நபர்கள் சுற்றித்திரிந்தாள் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் எனவும், முறையான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைகளை பயன்படுத்தி ஊழியர்கள் வேலையில் ஈடுபட வேண்டும் எனவும் பண பரிவர்த்தனை செய்யும் போதும், ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது மிகுந்த பாதுகாப்புடனும், விழிப்புடனும் வழியில் தேவையில்லாத அசம்பாவிதங்கள் ஏற்படாமலும், ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும் எனவும் அதிகப்படியான பண பரிவர்த்தனையின் போது பாதுகாப்பான முறையில் உரிய பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் அனுமதி பெற்று எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் பங்கு பெற்றனர். சைபர் கிரைம் குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.தினகரன் மற்றும் தனி பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
















