திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகர காவல் சரகம் அசேஷம் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கடந்த 07.05.2018
அன்று துப்பாக்கி முனையில் கொள்ளையர்கள் 07 பேர் ரூ.5,58,550/- பணம் மற்றும் 84 கிராம் தங்க நகைகள் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.
மேற்படி கொள்ளைச்சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் 1)மரியசெல்வம் 36 தூத்துக்குடி m2)முத்துக்குமார் 30தூத்துக்குடி 3)மீரா மொய்தீன் 32 4)சுடலைமணி 31 தூத்துக்குடி 5)ராஜா 35 ராமநாதபுரம் 6)அய்யப்பன் 29 மதுரை7)கூல்மணி@ மணிகண்டன் 25 மதுரை ,ஆகியோரை தனிப்படையினர் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் நகைகள், ஆகியவற்றை மீட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இந்நிலையில் மேற்படி வழக்கை விசாரித்த மன்னார்குடி சார்பு நீதிமன்றம் இன்று(09.08.21) மேற்படி குற்றவாளிகள் 1,3,4,5,6 ஆகியோருக்கு 10-வருட கடுங்காவல் சிறைத்
தண்டனையும்எதிரி 2-க்கு09 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும் குற்றவாளிக்கு 07. வருட கடுங்காவல் சிறைத் தண்டனையும்தீர்ப்பு வழங்கியது. சிறப்பாக புலன்விசாரணை முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்த மன்னார்குடி நகர காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.C.விஜயகுமார் IPS அவர்கள் பாராட்டினார்கள்.