சென்னை வங்கியில் 20 கோடி ரூபாய் மதிப்புள்ள 31.7 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த வழக்கில் முக்கிய குற்றவாளி முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்த மாணவர்கள் என்பது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. அவர்களிடம் இருந்து 28 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 10 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. விழுப்புரத்தில், இந்த வழக்கில் கைதான சூர்யா என்பவனின் நண்பரிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவையில் 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 700 கிராம் தங்க நகைகள் உருகிய நிலையில் மீட்கப்பட்டதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், வங்கியில் கொள்ளை போன அனைத்து நகைகளும் மீட்கப்பட்டன.