ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வந்துள்ளார். வங்கியில் 98 லட்ச ரூபாய் கையாடல் செய்த விவகாரத்தில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
என்பது குறிப்பிடதக்கது. மண்டபத்தில் வங்கி கிளையில் பணியாற்றும் போது அந்த அப்பகுதியை சேர்ந்த ஆண்டனி, குமார், வெள்ளைச்சாமி ஆகியோருடன் சேர்ந்து கடந்த மே மாதம் வங்கியில் கொள்ளையடிப்பது குறித்து வாசிங்டன் ஆகியோர் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இதில் வெள்ளைச்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டியில் இருந்த காரணத்தினால் கோவில்பட்டி ஸ்டேட் பங்க் ஆப் இந்தியாவில் கொள்ளையடிக்கலாம் என்று கூறியுள்ளார்.
அதே போன்று கோவில்பட்டி அருகே விருதுநகர் மாவட்ட எல்லையில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பாதுகாப்பு குறைப்பாடு கூறித்து தெரிந்து கொண்ட வாசிங்டன் அங்கேயும் சேர்த்து கொள்ளையடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.. மேலும் இந்த கும்பல் வங்கிகளில் கொள்ளையடிக்க் யூடிப்பினை பார்த்து பயிற்சி எடுத்துள்ளனர்.வங்கியில் பணம் எங்கும் இருக்கும், எப்படி வங்கியில் நுழைவது குறித்து வாசிங்டன் இந்த கும்பலுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார்.இந்த கும்பல் வாட்ஸ் அப் மூலமாக கொள்ளை சம்பவம் குறித்து திட்டமிட்டு வந்துள்ளனர்.இவர்கள் நடவடிக்கை குறித்து போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர்கள் திட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.இவர்கள் 5 பேரையும் கைது செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேறும் யாரூம் இதில் தொடர்பு உண்டா? வேறு வங்கிகளில் எதுவும் கைவரிசை கட்டி உள்ளார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.