வேலூர் : வேலூர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.2¼ லட்சம் கையாடல் திருப்பத்தூர் தாலுகா செட்டியப்பனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இங்கு கடந்த 2007-ம் ஆண்டு செயலாளராக ரகுநாதன் மற்றும் கூடுதல் செயலாளராக ராமலிங்கம் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இருவரும் சேர்ந்து பலருக்கு நகைக்கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயார் செய்து ரூ.2 லட்சத்து 27 ஆயிரம் கையாடல் செய்தனர். வங்கியின் வரவு, செலவு கணக்கு தணிக்கையில் இந்த கையாடல் தெரிய வந்தது. இதுகுறித்து கூட்டுறவு துணைபதிவாளர் வேலூர் வணிக குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ரகுநாதன், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்து வேலூர் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
அதையடுத்து இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். 2 பேருக்கு ஜெயில் தண்டனை இதுதொடர்பான வழக்கின் விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் (எண்-2) நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வக்கீல் இந்திரா மிசையல் வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. வழக்கை மாஜிஸ்திரேட்டு திருமால் விசாரித்து தீர்ப்பு கூறினார். அதில் கூட்டுறவு வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் பணம் கையாடல் செய்த ரகுநாதனுக்கு 6 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.27 ஆயிரம் அபராதமும், ராமலிங்கத்துக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்