சென்னை : Google பிளே ஸ்டோரில், இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட லோன் ஆப்களில் கடன் பெறுபவர்களை அந்த ஆப் உரிமையாளர்களே தொடர்ச்சியாக மிரட்டி வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் ப்ரைம் காவல்துறையினருக்கு, ஐந்து புகார்கள் வந்தன. மோசடிக்காரர்கள் கடன் பெற்றவர்களின் கைபேசிகளை ஹேக் செய்து கைபேசியில் இருக்கும் புகைப்படங்களை எடுத்து ஆபாச புகைப்படம் ஆக மாற்றி கைபேசியில் உள்ள நண்பர்கள் உறவினர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதிக மனச்சோர்வில் காயம் அடைந்தவர்கள் புகார் அளித்துள்ளனர். இதைஅடுத்து மோசடியில் தனிபடை அமைத்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.
ப்ளே ஸ்டோரில் உள்ள லோன் ஆப் செயலிகள் ஆராய்ந்தும் புகார் அளித்தவர்களுக்கு மோசடிக்காரர்கள் அனுப்பிய மெசேஜ்களை ஆய்வு செய்தும், 200க்கும் அதிகமான ஈமெயில் முகவரிகள் வங்கி கணக்குகள் ஆயிரத்திற்கும் அதிகமான வாட்ஸ்அப் எண்கள் சேகரிக்கப்பட்டு காவல்துறையினர் ஒரு தரவுத்தளம் உருவாக்கினர். இதன் காரணமாக தீவிர விசாரணையில், குற்றவாளிகள் உத்திரபிரதேசம் மாநிலங்கலிருந்து செயல்படுவது கண்டறியப்பட்டது. விரைந்து சென்ற காவல்துறையினர், செல்போன் சிக்னலை வைத்து லோன் ஆப் கலெக்ஷன் ஏஜண்டான அந்த மாநிலத்தின் ஜங்கிள் குல்ரிகா பகுதியை சேர்ந்த தீபக்குமார் பாண்டே (26), என்பவரை கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து 8 செல்போன்கள், 7 லேப்டாப்கள் மற்றும் 19 சிம்கார்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இவர்களது வங்கி கணக்குகளை கண்டறிந்து அதனை முடக்கும் பணியிலும் சைபர் கிரைம் காவல்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பின்னணியில் இருக்கும் நபர்களை கைது செய்யும் பணியில், காவல்துறையினர், ஈடுபட்டு வருகின்றனர்.