திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் லைட் ஆப் சிட்டி கிறிஸ்துவின் ஊழியங்கள் 8 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு. துரை சந்திரசேகர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட கிறிஸ்தவ கல்லறை தோட்டத்தை சிறப்பாக சுற்றுச்சுவர் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார். அவருக்கு மீஞ்சூர் போதகர்கள் ஐக்கியத்தின் சார்பாகவும், கிறிஸ்தவர்கள் ஐக்கிய நலவாழ்வு சங்கத்தின் பொதுச் செயலாளர் Rev.ஜெ.யாபேஸ் அவர்கள் சால்வை அணிவித்து வரவேற்றார். உடன் மீஞ்சூர் போதகர்கள் ஐக்கியத்தின் தலைவர் Rev.D.ஜெகநாதன் மற்றும் லைட் ஆப் சிட்டி ஊழியத்தின் ஸ்தாபகர் Rev.ஆல்பர்ட் அவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்து சிறப்பித்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு