விருதுநகர்: ராஜபாளையம் அருகே, ஜார்ஜ் போட்டபடி லேப்டாப் பார்த்துக்கொண்டிருந்த இளம் பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே, சொக்கநாதன் புத்தூர், கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்த ராஜாராம் என்பவரின் மனைவி செந்திமயில் (வயது 22). இவரது கணவர் ராஜாராம் சவுதியில் பணி செய்து வரும் நிலையில், தந்தை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், செந்திமயில் சார்ஜ் ஏற்றியபடி லேப்டாப் பயன்படுத்தியதாக தெரிகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு மயங்கமடைந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்த அவரது தந்தை செந்திமயிலை மீட்டு, சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் , ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து , தகவலறிந்த வந்த சேத்தூர் போலீசார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜ் ஏற்றியபடி, லேப்டாப் பார்த்த இளம்பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி