கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் . ஓசூர் அடுத்த மோரனப்பள்ளி பகுதியில் கனரக வாகன என்ஜின் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் சம்பசம் அன்று ரூ. 10 லட்சம் மதிப்பிலான உதிரிபாகங்கள், லேப்டாப், ஏசி உள்ளிட்டவை திருட்டு போனது. இது குறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இது தொர்பாக போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியில் வசித்து வந்த வடமாநில வாலிபர்களான சந்தீப் (34) சுபத் (26) தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பழனி (42) ஓசூர் பகுதியை சேர்ந்த சிவராஜ் (20) சுனில்குமார் (19) மற்றும் 3 சிறுவர்கள் என 8 பேர் உதிரி பாக பொருட்கள், லேப்டாப், ஏசி ஆகியவற்றை திருடியது தெரிந்தது இதையடுத்து, போலீசார் அவர்கள் 8 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்