கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் கதிரவன் என்பவர் 08.12.2022 ஆம் தேதி இரவு 9.00 மணிக்கு ஓசூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் பெஞ்சில் லேப்டாப் பையுடன் உட்கார்ந்து இருந்த பொழுது தனக்கு அருகே நின்றிருந்த நபர் திடீரென ஓடி வந்து தான் வைத்திருந்த லேப்டாப் பையை பறித்துக் கொண்டு ஓடி சென்றவரை துரத்திச் சென்றபோது பேருந்து வெளியே செல்லும் இடத்தில் காரில் ஏரி தப்பி சென்றதாக ஓசூர் டவுன் காவல் நிலையம் ஆஜர் ஆகி கதிரவன் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து விசாரணை செய்த போலீசார் லேப்டாப் பறித்து சென்ற இரண்டு நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.