சென்னை: சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து, கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டுள்ளதின் தொடர்ச்சியாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மஞ்சுளா மற்றும் K8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்
காவல் குழுவினர் 02.06.2021 அன்று இரவு அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நடுவாங்கரை மேம்பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு லாரி மற்றும் 3 கார்களை நிறுத்தி சோதனை செய்ததில்,
மேற்படி 1 லாரி மற்றும் 3 கார்களில் கர்நாடக மாநில மதுபாட்டில்களை கடத்தி வந்த நேபாளத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சோனுசிங், வ/39, சேத்துபட்டு என்பவரை கைது செய்தனர்.
மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 1 லாரி மற்றும் 3 கார்கள் பறிமுதல் செய்து, வாகனத்தில் இருந்த 36 பெட்டிகளில் 1000 ML அளவு கொண்ட 324 மது பாட்டில்களும், 17 பெட்டிகளில் 750 ML அளவு கொண்ட 204 மது பாட்டில்களும், 60 பெட்டிகளில் 180 ML அளவுக் கொண்ட 2,880 மது பாட்டில்களும் என மொத்தம் 3,408 மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் தப்பியோடிய தலைமறைவு குற்றவாளிகளை பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட குற்றவாளி சோனுசிங் என்பவர் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.