கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. பகலவன், IPS ., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் காய்ச்சுதல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். அதன்படி (21.10.2022), தேதி காலை வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாணிக்கம், மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கல்வராயன் மலைப்பகுதி சேராப்பட்டு மலையில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
லாரி டியூபில் சுமார் 200 லிட்டர் சாராயம் கடத்திவந்த குரும்பாலூர் சேர்ந்த விக்னேஷ் (23),.மற்றும் சேராப்பட்டு சேர்ந்த செல்வமணி (21), ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனம் மற்றும் 200 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்து குற்றவாளிகள் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சாராயம், கஞ்சா, லாட்டரி மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.