திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த கே.என்.கண்டிகையை சேர்ந்தவர் லாரி ஓட்டுநரான சிவக்குமார் 33. இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இன்று பிற்பகல் தமது தந்தை வீட்டின் வெளியே அமர்ந்து சிவக்குமார் மது அருந்தியுள்ளார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று சிவக்குமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. அப்போது சிவக்குமார் வெளியே வர முற்பட்ட போது அவரை அருகில் உள்ள விவசாய நிலையத்தில் ஓட ஓட விரட்டி முகத்தில் சரமாரியாக வெட்டி கொலை செய்து மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது. இதனிடையே தேவேந்திரன் 30. என்பவர் பொன்னேரி காவல் நிலையத்தில் சரணடைந்து தமது அண்ணன் சிவக்குமாரை வெட்டி கொலை செய்து விட்டதாக கூறியுள்ளார்.
தமது மாமியார் ஜானகியுடன் சிவகுமார் தகாத உறவில் இருந்து வந்ததாகவும், இதனை கண்டித்தும் கேட்காததால் நண்பர்களுடன் சேர்ந்து அண்ணனை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட சிவக்குமாரின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.