திருச்சி : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி, காவல் துணை கண்காணிப்பாளர் (தனிப்படை) திரு. பால்சுதர் அவர்களின் மேற்பார்வையில், திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் திரு. நாகராஜன் அவர்களின் தலைமையில் ஜீயபுரம் காவல் உட்கோட்டம் பெட்டவாய்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பகுதியில் சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்துள்ளனர் என்ற தனிப்படை கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மடக்கிப் பிடித்து விசாரித்தனர், அவர்கள் ஐந்து நபர்களும் முன்னுக்குப் பின் முரணாக பேசியதும், மேற்கொண்டு அவர்களிடம் சோதனை செய்த பொழுது அவர்கள் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஒரு நம்பர் லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட, ஒரு நம்பர் லாட்டரி எழுதப்பட்ட எண்கள், நோட்டுப் புத்தகங்கள், பில் புக்குகள் மற்றும் செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. இதில் 2,02,260 ரூபாய் ரொக்க பணமும், 4 செல்போன்களும், மூன்று இரு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, 5 நபர்களை கொண்டு சட்ட விரோதமாக ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட கும்பலுடன் மேற்கண்ட வழக்கு சொத்துக்களை பெட்டவாய்த்தலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, பெட்டவாய்த்தலை காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருச்சியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. நிஷாந்த்