கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு திரு.ரகுபதி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிதம்பரம் சுப்பிரமணிய படையாச்சி தெருவை சேர்ந்த ஆகாஷ் 24. செல்வம் 33. கிருபாகரன் 24. என்பதும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.