பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.மணி அவர்களின் உத்தரவின்படி மாவட்டத்தில் லாட்டரி விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு சிறப்பு ரோந்து அலுவல் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இன்று 10.09.2021-ம் தேதி பெரம்பலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.செல்வராஜ் அவர்கள் மாலை ரோந்து அலுவலில் இருந்த போது .
அவருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் முனியாண்டி விலாஸ் அருகே அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், அரணாரை கிராமத்தைச் சேர்ந்த பார்த்திபன் , என்பவரை கைது செய்தும்,
அவர் விற்பனைக்காக வைத்திருந்த குயில் – 3 சீட்டு கட்டுகள், தங்கம்-7 சீட்டுகட்டுகள் மற்றும் நல்லநேரம் -5 சீட்டு கட்டுகள் ஆகியவற்றையும் பணம் ரூபாய் 400/- யும் பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்தார்.
மேற்படி நபரை பெரம்பலூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.முருகேசன் அவர்கள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தார்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை.