கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலைய பகுதியில் கிருஷ்ணகிரி பழைய பேட்டை விஜய் வித்யாலயா பள்ளி பின்புறம் அருகில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போது லாட்டரி சீட்டு விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், 6730/- ரூபாய் பணம், மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.