சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட மூன்று நெம்பர் லாட்டரியை வாட்ஸாப் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் குலுக்கலில் பரிசுகள் ஏதுமின்றி முறைகேடுகள் நடைபெற்று வருவதாகவும் .
இதனால் கூலித்தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் பணத்தை இழந்து பெரிதும் பாதிப்புக்குள்ளாகி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் சென்றது,
புகாரின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், இன்னிலையில் ஆத்தூர் அருகே முல்லைவாடி பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்,
அப்போது பெட்டிக்கடை ஒன்று அமர்ந்து கொண்டு மூன்று நெம்பர் ஆன்லைன் லாட்டரியை விற்பனை செய்து கொண்டிருந்த கோட்டை பகுதியை சேர்ந்த சாதிக்பாஷா என்பவரை கைது செய்த தனிப்படை போலீசார் அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர்