கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரசிபுரம் டெம்போ ஸ்டேண்ட் அருகே லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீசார்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் 650 /- பணத்தை கைப்பற்றி வழக்குப்பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.