கோவை : கோவை மாவட்டம், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசார் ரோந்து சென்றபோது ஒருவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்து கொண்டிருந்தார் தெரியவந்தது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வினோத்குமார் (40) என்பதும் அவரிடம் இருந்து 2,150 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்