நெல்லை: பாளை மார்க்கெட் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் திரு.முருகன், காவல் உதவி ஆய்வாளர் திரு.சண்முக மூர்த்தி ஆகியோர் தலைமையிலான போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தது தெரியவந்தது.
போலீசார் ரமேசை கைது செய்து அவரிடமிருந்து ரூ.4,500 பணம் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.