திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே கேரள மாநிலத்திலிருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்த முனியப்பன் 55. என்பவரை எஸ்.பி தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள 1,500 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கிறார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா