திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மது விற்பனை, கஞ்சா, மணல் கடத்தல், லாட்டரி விற்பனை மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவு படி ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. (01.12.2023)ந் தேதி மாவட்டம் முழுவதும் 36 நபர்கள் சட்ட விரோத செயல்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தீவிர வேட்டையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.1 .சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 2.தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 5-நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 3.சூதாட்டத்தில் ஈடுபட்ட 6-நபர்கள் கைது செய்தும், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த தலைமறைவு பிடிக்கட்ட குற்றவாளிகள் 2 நபர்கள் தனிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்னர். மேலும், இது போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிரான இத்தீவிர வேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடைபெறும் என்றும், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.S.ஜெயக்குமார், M.Sc., (Agri).,* அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.