இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் உத்தரவின் பேரில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு 01.02.2020 தேதி இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திருமதி. கீதா அவர்கள் மற்றும் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. மனோகரன் அவர்கள் ஆகியோர் தலைமையில் 9 காவல் ஆய்வாளர்கள், 28 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 136 காவலர்கள் ஆக மொத்தம் 175 நபர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் சிறப்பு ரெய்டுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இராணிப்பேட்டை, சிப்காட், வாலாஜா,ஆற்காடு கிராமியம், ஆற்காடு நகரம், திமிரி, அரக்கோணம் நகரம், அரக்கோணம் கிராமியம், சோளிங்கர், ஆகிய காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் ஈடுபட்டு வந்த 32 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இது சம்பந்தமாக இராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவிக்கையில் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மேலும் லாட்டரி மற்றும் காட்டன் சூதாட்டம் தொழிலில் இருந்து யாரேனும் திருந்தி வாழ முன்வந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு மேற்கொள்வதற்க்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும் என தெரிவித்தார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்