திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே லாட்டரி டிக்கெட் விற்பனை செய்த நிலக்கோட்டையை சேர்ந்த முருகன், ஆறுமுகம், ரத்தினபாண்டி ஆகிய 3 பேரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. பாஸ்கரன்அவர்களின் உத்தரவுப்படி, தனிப்படை காவல் துறை சார்பு ஆய்வாளர் திரு.சேக்தாவூத், தலைமையிலான காவல்துறையினர் மடக்கி பிடித்து நிலக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து நிலக்கோட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு பிரிண்டிங் செய்வதற்கு பயன்படுத்திய கம்ப்யூட்டர்,லேப்டாப் உள்ளிட்ட சாதனங்களை பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா