திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமம், பசும்பொண் நகர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் 40. மற்றும் வெங்கட்ராயன் பேட்டை, நெ-109 நேரு தெருவைச் சேர்ந்த சையத் காசிம் ஆகிய இருவரும் லாட்டரி சீட்டு விற்ப்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக செய்யாறு காவல் ஆய்வாளர் திரு.A.பாலு அவர்கள் வழக்குபதிவு செய்து, குற்றவாளிகளை சிறையில் அடைத்தார்.
மேலும், மதுரை மாவட்டம், போடிலைன் எல்லிஸ் நகரை சேர்ந்த வேல்பாண்டி (எ) ரோலக்ஸ் பாண்டி 23. என்பவர் பிரமதேசம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட திருபனங்காடு கிராமத்தில் நான்கு சக்கர வாகனம் (CAR) திருடிய குற்றத்திற்காக தூசி காவல் ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்கள் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
மாவட்ட ஆட்சியர் திரு.பா.முருகேஷ்,இ.ஆ.ப., அவர்கள், மேற்கண்ட நபர்களை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.