சேலம் : சேலம் மாவட்டம், ஓமலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காம்மன்ட பட்டி அணைமேடு முனியப்பன் கோவில் பகுதில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக ஓமாலூர் காவல் துறையினர் ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் திரு.அங்கமுத்து (ம) தலைமை காவலர் அய்யப்பன் அவர்கள், தகவல் கிடைத்த பகுதியில் சென்று பார்த்தபோது அங்கே ஒருவர் கோவில் பொது இடத்தில் அமர்ந்து கொண்டிருந்த தனி நபரை சோதனை செய்த போது அவரிடம் 52 லாட்டரி சீட்டு இருந்தது. இதனை அடுத்து அவரை காவல் துறையினர் விசாரணை செய்ததில் செல்வராஜ் (40). அதே பகுதியை சேர்ந்தவர் என விசாரணையில் தெரிய வந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
S. ஹரிகரன்