நாகை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் யானைகட்டி முடுக்கு சந்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக நாகூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவர்கள் நாகூர் மியான் தெருவை சேர்ந்த அசன் இப்ராஹிம் 57. நாகூர் மதன்ராஜ் 24. முகமது அலி 48. என்பதும், இவர்கள் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.