திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன்குமார்,இ.கா.ப., அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி, திருவண்ணாமலை நகர உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.D.V.கிரண் ஸ்ருதி,இ.கா.ப., அவர்களின் மேற்பார்வையில், திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளர் திரு.B.சந்திரசேகரன் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் திரு.சுந்தரேசன், திரு.சகாதேவன் மற்றும் காவலர்கள் இணைந்து திருவண்ணாமலை நகரப்பகுதியில் நடத்திய தேடுதல் வேட்டையில் 1). திருவண்ணாமலை மாவட்டம், அண்ணா நகர், நான்காவது தெருவைச் செர்ந்த ராஜேந்திரன் 58, சங்கர் 40, ரங்கநாதன் ஆகிய மூன்று நபர்களும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து, திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் திருவண்ணாமலை கிழக்கு காவல் ஆய்வாளர் திரு.R.குணசேகரன் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் திரு.கருனாகரன் மற்றும் காவலர்கள் இணைந்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்திய தேடுதல் வேட்டையில் 1). அண்ணாமலை 70, தாமோதரன் 43, ஆகிய இரண்டு நபர்களும் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் கீழ்பென்னாத்தூர் காவல் ஆய்வாளர் திரு.R.லட்சுமிபதி அவர்களின் தலைமையில் உதவி ஆய்வாளர் திரு.மணிவண்ணன் மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம், சோமாசிபாடி கிராமத்தை சேர்ந்த பாண்டுரங்கன் 66, தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து, கீழ்பென்னாத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் வேட்டவலம் உதவி ஆய்வாளர் திரு.ராமச்சந்திரன் அவர்களது தலைமையில் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கிராமத்தை சேர்ந்த குப்புசாமி (எ) நண்டு ரவி 58,என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற குற்றத்திற்காக கைது செய்து, வேட்டவலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.M.அறிவழகன் அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் திருமதி.பிரபாவதி அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் திருவண்ணாமலை மாவட்டம், வெண்மனி கிராமத்தை சேர்ந்த 1). ஆறுமுகம் 54, 2). திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சின்னப்பன் தெருவை சேர்ந்த அருள்தாஸ் 62, ஆகிய இரண்டு நபர்களும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற குற்றத்திற்காக கைது செய்து, சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் செங்கம் துணைகாவல் கண்காணிப்பாளர் திரு.R.சின்னராஜ் அவர்களின் மேற்பார்வையில், செங்கம் வட்ட காவல் ஆய்வாளர் திரு.K.சரவணன் அவர்களின் தலைமையில், உதவி ஆய்வாளர் திருமதி.லதா மற்றும் காவலர்கள் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் சத்தியவானி 40, என்பவர் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த குற்றத்திற்காக கைது செய்து, புதுப்பாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் அவர்களிடமிருந்து KUIL 20 – 36 சீட்டுக்கள், ROJA -65 சீட்டுகள் THANGAM 50 – 66 சீட்டுக்கள், NALLANERAM 100 – 28 சீட்டுக்கள், DEAR 50- 10 சீட்டுக்கள், KUMARAN 200- 10 சீட்டுக்கள் என மொத்தம் 215 லாட்டரி சீட்டுக்கள் மற்றும் 1350ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து நமது நிருபர்
திரு.தாமோதரன்