கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்தபோது தடத்தரை கிராமத்தில் குற்றவாளி வீட்டின் அருகே, வேப்பனப்பள்ளி BDO ஆபீஸ் எதிரில் உள்ள மதினா பாஸ்ட்புட் கடையின் முன்பு ஆகிய இரண்டு இடங்களில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்த போது தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகள், ₹9000/- ரூபாய் பணம் மற்றும் இரண்டு செல்போன்பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.