திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த நான்கு நபர்கள் கைது கூத்தாநல்லூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்த கூத்தாநல்லூர் பாண்டுகுடியை சேர்ந்த செல்வராஜ் லட்சுமாங்குடி மரக்கடையை சேர்ந்த முருகன் நீடாமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நீடாமங்கலம் குயவர் தெருவை சேர்ந்த ரவி மன்னார்குடி காவல் சரகர எல்லைக்கு உட்பட்ட மன்னார்குடி மேலக்கரை ருக்மணி குளத்தைச் சேர்ந்த ஐயப்பன் ஆகிய நான்கு நபர்களையும் அதிரடியாக போலீசார் கைது செய்தனர். மேலும் இது போல் சட்டத்திற்கு புறம்பாக ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ் ஜெயக்குமார்Msc அவர்கள், எச்சரித்துள்ளார்.
திருவாரூரிலிருந்து நமது மொபைல் நிருபர்
திரு.சுரேஷ்