சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், இளையான்குடி நகர் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் தீவிர சோதனையில் அக்பர் அலி (52) என்பவர் லாட்டரி சீட்டுகளை தனது பெட்டிக்கடையில் விற்பனை ஈடுப்பட்டது தெரியவந்தது. திருச்சியை சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் பரிசு விழும் நபர்களுக்கு தொகைய பெற்று தந்தது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது அவர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி