பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் காமராஜர் வளைவு அருகில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல் ஆய்வாளர் திரு.மனோகரன் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.சிக்கந்தர் பாஷா காவலர்கள் திரு.பெரியசாமி, திரு.செந்தில்குமார் ஆகியோர்கள் லாட்டரி விற்றுக் கொண்டிருந்த வடிவேல் 54 என்ற நபரை கைது செய்து அவரிடமிருந்து தங்கம்-7, நல்ல நேரம்-25, விஷ்ணு-10, ரோசா-10, குமரன்-10 ரூபாய். 8000 பணம் மற்றும் 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபரை நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
என்றும் மக்கள் பாதுகாப்பிற்காக
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை