நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு.ராமகிருஷ்ணன் திரு.சுரேஷ் மற்றும் போலீசார் அதன்பேரில் விசாரணை நடத்தி வந்தனர் விசாரணையில் திட்டச்சேரி கொந்தகை நாகூர் சாலையை சேர்ந்தவர் ஹாஜா 34. இவர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வது தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹாஜாவை கைது செய்தனர்.