நாகை : நாகை மாவட்டம், திட்டச்சேரி ப|குதியில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக திட்டச்சேரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். திட்டச்சேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் முகமது ஜாகீர் உசேன் (34), முகமது உமர் (35), ஆகிய 2 பேரும் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக தெரிய வந்தது அதன்பேரில் போலீசார் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திரு .ராமகிருஷ்ணன் திரு .சுரேஷ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் திரு.டென்னிசன். திரு.வீரப்பிள்ளை ஆகியோர் 2 பேரை கைது செய்தனர்.